'லவ் டுடே' பாணியில் செல்போனை மாற்றிய மணமகள்.. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணமகன்!

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

’லவ் டுடே’ பாணியில் மணமகனின் செல்போனை வாங்கி பார்த்த மணமகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மணமகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் காதலர்கள் இருவரும் செல்போனை மாற்றிக்கொண்டு ஒருநாள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நாயகியின் தந்தை விதிப்பார் என்பதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதும் தெரிந்ததே. மிகவும் சுவராசியமாக ரசிக்க வைக்கும் திரைக்கதையுடன் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ’லவ் டுடே’ பாணியில் சமீபத்தில் திருமணம் நிச்சயமான வேலூர் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த பெண் ஒருவர், தனது வருங்கால கணவர் அரவிந்த் செல்போனை வாங்கி பார்த்து உள்ளார். அப்போது அந்த செல்போனில் ஒரு சிறுமியின் அந்தரங்க வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் அவர் அந்த போனை அரவிந்த் இடம் கொடுத்துவிட்டு ரகசியமாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விசாரணையில் செல்போனில் இருந்த 15 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அரவிந்த் சில அந்தரங்க வீடியோக்களை எடுத்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரவிந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஆல்யா மானஸாவுக்கு காயம் ஏற்பட்டது இப்படித்தான்... அவரே பகிர்ந்த வீடியோ!

பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானஸா கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

அஜித் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் ஹாலிவுட்டிலேயே 100 நாள் ஓட வைப்பேன்.. பிரபல இயக்குனர்

அஜித் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலேயே  100 நாள் ஓடவைக்கும் படத்தை என்னால் இயக்க முடியும் என பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில்

'காந்தாரா' இரண்டாம் பாகத்தில் செம ட்விஸ்ட்.. பக்கா பிளான் போடும் ரிஷப் ஷெட்டி!

 கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இதற்காக ரிஷப் ஷெட்டி பக்கா

அஜித் கலந்து கொண்ட விஜய் திருமணம்... தளபதி மெட்டி போடும் அழகே தனி.. அரிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் திருமண புகைப்படங்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

என்ன ஒரு தைரியம்?  குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டும் நடிகை: வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் குளத்தில் இறங்கி இரண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ