லேட்டா வந்த கோவம்: மூஞ்சில சூடான எண்ணெயை ஊற்றிய மனைவி 

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

வீட்டிற்கு தாமதமாக வந்த கணவனை கேள்வி கேட்ட மனைவி தனது கேள்விக்கு சரியான பதில் வராததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனுடைய முகத்தில் சூடான எண்ணையை ஊற்றிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது அரவிந்த் என்பவரின் மனைவி 35 வயது ஷிவ்குமாரி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு தாமதமாக வந்ததை அவருடைய மனைவி தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. அதன் பின்னர் குடும்பத்தினர் சமாதானப்படுத்திய பிறகு அனைவரும் தூங்க சென்றனர்

இந்த நிலையில் தாமதமாக வந்தது குறித்து கணவன் சரியான விளக்கம் அளிக்காததோடு, தன்னை கடுமையாக பேசியதால் ஆத்திரம் தொடர்ந்து ஷிவ்குமாரிக்கு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் நள்ளிரவில் எழுந்து எண்ணெயை சூடாக்கி, தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் முகத்தில் வீசியுள்ளார். இதனால் அலறி துடித்து அரவிந்தை அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இதுகுறித்து அரவிந்த் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிவ்குமாரி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சிறு தகராறுகாக கணவர் முகத்தில் சூடான ஆயிலை அவருடைய மனைவியே ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது