close
Choose your channels

உணவுக்கு மதம் கிடையாது: ஜொமைட்டோ பதிலடிக்கு வாடிக்கையாளர்கள் ரியாக்சன்

Wednesday, July 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்லைனில் உணவு சப்ளை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜொமைட்டோ. இந்த நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் தன்னுடைய உணவை இந்து அல்லாத ஒருவர் டெலிவரி செய்தால், தான் அந்த உணவை கேன்சல் செய்துவிடுவதாக கூறியதற்கு ஜொமைட்டோ நிறுவனம் தக்க பதிலடி கொடுத்துள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஜொமைட்டோவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருடைய உணவு தயாராகிவிட்டதையும், அவருக்கு உணவை டெலிவரி செய்யும் நபர் குறித்த விபரங்களையும் ஜொமைட்டோ அனுப்பியுள்ளது. உடனே அவர் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு 'இந்து அல்லாதவர் தனது உணவை டெலிவரி செய்ய வந்தால் தனது ஆர்டரை ரத்து செய்துவிடுவதாகவும் இந்துவிடம் மட்டுமே தனது உணவை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஜொமைட்டோ நிறுவனம், 'நீங்கள் கூறியபடி டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது, இதற்காக ஆர்டரை ரத்து செய்தால் அதற்கான பணமும் திருப்பி தரப்படாது என்று பதிலடி கொடுத்துள்ளது. மேலும் உணவுக்கு எந்த மதமும் இல்லை என்றும், உணவே ஒரு மதம் தான் என்றும் ஜொமைட்டோ தெரிவித்துள்ளது. ஜொமைட்டோவின் இந்த பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இருப்பினும் ஒருசிலர் அமித் சுக்லாவிற்கும் ஆதரவு தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். உணவுக்கு எந்த மதமும் இல்லை என்று கூறிய ஜொமைட்டோ நிறுவனம் தனது இணையதளத்தில் 'ஹலால்' உணவு வழங்கப்படும் என விளம்பரம் செய்திருப்பதாகவும், இது மதம் சார்ந்தது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.