லிவ்-இன் உறவு காதலியைக் கொன்று, குக்கரில் வேக வைத்த கொடூரக் காதலன்… அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்- இன் உறவுமுறைகளில் வாழும் சில காதல் உறவுகள் தொடர்பான கொலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன. டெல்லி, ஹைத்ராபாத்தை தொடர்ந்து தற்போது மும்பையில் ஒரு கொலை அரங்கேறி இருப்பதுடன் இன்னும் ஒருபடி மேலே சென்று காதலியை குக்கரில் வைத்து வேக வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையிலுள்ள மீராசாலை பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் சஹானி. 56 வயதான இவர் போலிவாலி பகுதியில் கடை ஒன்றை வைத்து நடத்திவந்த நிலையில் சரஸ்வதி வைத்யா எனும் 36 வயது பெண்ணுடன் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவியைப் போன்று கடந்த 3 வருடங்களாக வாழ்ந்துவந்த இவர்களுக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடும் கோபமடைந்த மனோஜ் தனது காதலி சரஸ்வதியை கொடூரமாகக் கொன்றுள்ளார். இதைத் தொடர்ந்து உடலை அப்புறப்படுத்துவதற்காக மரம் அறுக்கும் இயந்திரத்தை வாங்கி வந்து தனது வீட்டில் வைத்தே சரஸ்வதியின் உடலை அறுத்துள்ளார். மேலும் அந்த உடல் பாகங்களை அப்புறப்படுத்துவற்கு வசதியாக குக்கரில் வைத்து வேகவைத்துள்ளார். ஆனால் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் சரவஸ்தி வெளியே வராததாலும் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மனோஜ் வீட்டில் கொலை நடந்திருப்பதற்காக தடயத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் குக்கரில் வைத்து உடல்பாகங்களை வேக வைத்தற்கான அடையாளத்தையும் கண்டுபிடித்த நிலையில் தற்போது மனோஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக இருந்த மற்றொரு நபரும் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திய தனது காதலி ஷரத்தா வாக்கரை காதலன் அர்னாப் புனாவாலா கொலை செய்து 36 துண்டுகளாக வெட்டி தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார். அதேபோல மே மாதத்தில் ஹைதராபாத் பகுதியில் ஒன்றாக வசித்துவந்த யர்ரம் அனுராதா ரெட்டி என்பவரை சந்திரமோகன் என்பவர் 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்து தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்துள்ளார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது லிவ்-இன் முறையில் தன்னுடன் வாழ்ந்த காதலியைக் கொன்று அவரது உடல்பாகங்களையே குக்கரில் வைத்து சமைத்த மனோஜ் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

More News

'லியோ' படப்பிடிப்பில் எஸ்.ஜே சூர்யா, பிரதீப் ரங்கராஜன்.. என்ன காரணம்..?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா? இன்னும் ஒரு வாரத்தில் சியான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி ரிலீசுக்கு தயாராகி

'கஸ்டடி' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து

தமிழக அரசியல்வாதியின் மகனை மணக்கிறாரா மேகா ஆகாஷ்? தீயாய் பரவும் தகவல்..!

பிரபல தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இணையதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

பாஸ்மதி அரிசி மீது ஏன் இவ்வளவு காதல்? உடல் ஆரோக்கியத்தில் இதன் பங்கு என்ன?

இந்தியாவில் பெரும்பாலான நபர்களின் விருப்ப உணவாக தற்போது பிரியாணி மாறிவிட்டது. ஒருவேளை சைவ உணவுக்காரர்களாக இருந்தாலும் புலாவ் வகையான பிரியாணி உணவுகளைத்தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்