அனுஷ்காவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திட்டு வாங்கிய நபர்

  • IndiaGlitz, [Sunday,June 24 2018]

சமீபத்தில் ஓடும் காரில் இருந்து குப்பையை வெளியே வீசிய நபரை அனுஷ்கா கண்டித்த வீடியோ ஒன்றை அவரது கணவர் விராத் கோஹ்லி தனது டுவிட்டரில் வெளியிட்டு 'இவர் போன்ற நபர் இருந்தால் எப்படி 'தூய்மையான இந்தியா' உருவாகும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அவர் வெளியிட்ட வீடியோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு குப்பை வீசிய நபருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் அர்ஹான் சிங் என்பது என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் தன்னை சமூக வலைத்தளம் மூலம் அனுஷ்காவும் அவரது கணவர் விராத் கோஹ்லியும் அவமதித்ததாகவும், இதற்காக இருவரும் தன்னிடம் வருத்தம் கேட்க வேண்டும் என்றும் கூறி இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய அர்ஹான்சிங், பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாதுரி தீட்சிதி, சஞ்சய் கபூர் நடித்த 'ராஜா' என்ற படத்தில் சிறுவயது சஞ்சய் கபூராகவும், ஷாருக்கான் நடித்த 'பாபு தேசி மேம்' படம் உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அர்ஹான்சிங் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.