ஆக்சிஜன் கேட்டு டிவிட்டரில் பதிவு செய்தவர் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்த உ.பி. அரசு!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

உத்திரப்பிரதேசத்தில் தன் தாத்தாவுக்காக ஆக்சிஜன் கேட்டு டிவிட்டரில் பதிவிட்ட ஒருவர் மீது அம்மாநில போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குத் தொடுத்து இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் அவர் வதந்தி பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டையும் அந்த மாநில போலீசார் கூறியுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத் உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்சிஜன் இல்லை எனக் கூறும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இந்நிலையில் ஷாசங் யாதவ் என்பவர் தனது தாத்தாவுக்கு மிகவும் அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என நடிகர் சோனு சூட்டை டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இப்படி போடப்பட்ட பதிவைத் தொடர்ந்து ஷாசங்கின் தாத்தா மாரடைப்புக் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அதனால் இந்த டிவிட்டர் பதிவை ஊக்குவிக்க முடியாது எனக் கூறி ஷசாங்கின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் அரசு ஊழியர்களின் உத்தரவை மீறுதலுக்கான பிரிவு 188, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களை பரப்பும் வகையில் அஜாக்ரதையாக இருத்தலுக்கான பிரிவு 269, பொதுமக்கள் மத்தியில் உள்நோக்கத்துடன் அச்சத்தை ஏற்படுத்துதல் பிரிவுக்கான 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அதுவும் மகாராஷ்டிரா, உ.பி. , டெல்லி போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆக்சிஜன் தேவை என டிவிட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது 5 பிரிவுகளில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்த உ.பி. காவல்துறையைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

More News

வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது… நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த புதிய தமிழகம் கட்சி!

நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி மே 2 ஆம் தேதி நடக்கவிருக்கும்

'தல நீங்களும் ஓவியா ஆர்மியா? பிக்பாஸ் பாலாவின் டுவிட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் ஓவியா என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புகழை பெற்றார் என்பதும் தெரிந்தது. ஓவியாவுக்கு தான் முதன்முதலாக பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி

சத்யராஜின் அம்மா, மாமியார் புகைப்படத்தை பார்த்ததுண்டா? இதோ புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கடந்த 1990 மற்றும் 2000ல் இருந்த நடிகர் சத்யராஜ், தற்போது அவர் மிகச் சிறந்த குணசித்திர நடிகராக இருந்து வருகிறார் என்பதும் விஜய், சூர்யா

'ஆட்டோகிராப்' படத்தில் நடித்தவரா இவர்? இன்று எப்படி இருக்கிறார் பாருங்கள்!

சேரன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் 'ஆட்டோகிராப்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது

ஆர்.கண்ணனின் 'தள்ளி போகாதே: சென்சார் தகவல்: 

'ஜெயம் கொண்டான்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கண்ணன் அதன்பின் 'கண்டேன் காதலை' 'சேட்டை' 'இவன் தந்திரன்' 'பூமராங்' உள்ளிட்ட திரைப்படங்களை