பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சைடு வேலைப்பார்த்த ஆசிரியர்… வசமா மாட்டிய சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,September 13 2021]

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் கடந்த 3 வருடங்களாகத் தனக்கு உடல்நிலை சரியில்லை, தன்னுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை எனப் பல்வேறு பொய்க் காரணங்களைக் கூறிவிட்டு அதேநேரத்தில் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இதனால் கிட்டத்தட்ட 97,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 84 லட்சம் ரூபாய்) சம்பாதித்துள்ளார்.

அதேநேரத்தில் பள்ளியில் இருந்து ஆசிரியருக்கு வரவேண்டிய சம்பளம் மற்றும் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக பெற்ற நிவாரணத் தொகை எனக் கிட்டத்தட்ட 13,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 11,000 லட்சம்) ஆகியவற்றையும் ஒரே நேரத்தில் சம்பாதித்து உள்ளார். இதனால் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிப்பிதுங்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள பொர்டெனோன் இஸ்டிடோ டெக்னிகோ எனும் பள்ளியில் வேலை பார்த்து வந்த 47 வயது கணித ஆசிரியர் கடந்த 3 வருடங்களில் பள்ளிக்கு 769 நாட்கள் லீவு போட்டு உள்ளார். இந்த 3 வருடத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் மட்டும் 1095 நாட்கள். இதில் பொது விடுமுறையில் வேறு. இதனால் கடந்த 3 வருடங்களாக அந்த ஆசிரியரே பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால் தனக்கு வரவேண்டிய சம்பளத்தை மட்டும் சரியாக வாங்கிக் கொண்டுவிட்டார். கூடவே தனது லீவுக்கு அடையாளமாக மருத்துவச் சான்றிதழையும் அவர் ஒப்படைத்துவிட்டார்.

ஆனாலும் ஆசிரியரின் செயலில் சந்தேகம் கொண்ட பள்ளி நிர்வாகம் காவல் துறையின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த கணித ஆசிரியர் கடந்த 3 ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கன்சல்டண்டாக வேலைபார்த்தது தெரியவந்துள்ளது. மேலும் ஹோட்டல் புக்கிங், சுங்கச்சாவடி கட்டணங்கள் எனப் பல ஆதாரங்களை வைத்து குற்றத்தை நிரூபித்துவிட்டது.

இதையடுத்து கணித ஆசிரியர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளியில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற சம்பளத்தையும் திரும்ப செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குத்தான் ஏமாற்றும் குணம் நமக்கே ஆபத்தாக முடியும் எனக் கூறுகிறார்கள்.