இப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்!!!
ரஷ்யாவின் ஒரு மாகாணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அதுவும் வயதான பெண்களை மட்டும் தாக்கி கொலை செய்யும் பல வித்தியாசமான கொலைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை அந்நாட்டு போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். மேலும் அந்தக் கொலைகாரனிடம் நடத்தி விசாரணைதான் அந்நாட்டு மக்கள் மத்தியில் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ரஷ்யாவின் கிசான் பகுதியில் மெக்கானிக் தொழிலை செய்துவந்த 38 வயதான ஒரு நபர் பல திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப் பட்டு இருக்கிறார். இவர் கடந்த 2011-2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அப்பகுதியில் வசித்து வந்த பல வயதான பெண்களை அடுக்கடுக்காக கொலையும் செய்து இருக்கிறார். அந்தக் கொலைகளுக்கான காரணத்தை தெரிவித்த அந்த சைக்கோ கில்லர், “நான் மிகவும் பசியாக இருந்தபோது ஒரு மூதாட்டியைக் கொன்றேன். அடுத்தடுத்து பல வயதான பெண்களை பார்த்தேன். அவர்களிடம் ஏதேட்சையாக பேசினேன். அவர்களின் வீட்டிற்கும் கூட சில நேரங்களில் சென்றிருக்கிறேன்.
அவர்களே சில நேரங்களில் உதவிக்காக என்னை வீட்டு வாசலில் இருந்து அழைத்து இருக்கிறார்கள். இப்படி நான் பார்த்த பெண்கள் அனைவரும் வயதானவர்களாகவும் பாதிக்கப்பட்ட வர்களாகவும் இருந்தனர். அதனால் கொலை செய்துவிட்டேன்“ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தக் காரணத்தை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இப்படி ஒரு காரணத்திற்காக கொலை செய்வதா? என அந்நாட்டு போலீஸ் அதிகாரிகளும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடங்களில் நடந்த 26 கொலைகளில் அந்த நபர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.