close
Choose your channels

ரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, February 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஆவணப்படமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவண[படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது என்பதும் இந்த ஆவணப்படம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன்னர் டிஸ்கவரி சேனல் இந்த ஆவணப்படம் வரும் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் உள்பட அனைவரும் இந்த ஆவணப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பியர் கிரில்ஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்த ஆவணப்படத்தின் ஒருசில அட்டகாசமான காட்சிகளின் வீடியோவையும் டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos