close
Choose your channels

உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? த்ரிஷா, நயன்தாரா பட நடிகை ஆவேசம்

Thursday, March 26, 2020 • தமிழ் Comments

நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ த்ரிஷா நடித்த ’மோகினி’ ’பரமபதம் விளையாட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மானசா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கொரோனா தடை உத்தரவையும் மீறி வெளியே செல்லும் நபர்களை கடுமையாக வசை பாடி உள்ளார்.

கொரோனா வெளியே தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் ஏன் நீங்கள் வெளியே போகிறீர்கள் என்றும், நீங்கள் வெளியே போனால் கொரோனா உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் என்றும் வெளியே போகாமல் இருந்தால் மட்டுமே கொரோனாவை விரட்டி அடிக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் நீங்கள் எல்லோரும் படித்தவர்கள் தானே? உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நான் டிவியில் பார்க்கிறேன் எல்லோரும் குடும்பம் குடும்பமாக வெளியே செல்கிறீர்கள். பைக் மற்றும் கார்களில் எல்லோரும் வெளியே சென்று கொண்டிருக்கின்றீர்கள். வெளியே செல்லவா உங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள். இது ரொம்ப தப்பு. நீங்கள் வெளியே செல்லாமல் இருந்தால் தான் சில நாட்கள் கழித்து அனைவரும் வெளியே செல்ல முடியும், இல்லை என்றால் ரொம்ப கஷ்டம். எங்களை மாதிரி குட்டி பசங்க எல்லாம் வீட்டில் இருக்கும்போது உங்களுக்கு என்ன வந்தது. ஏன் வெளியே போகிறீர்கள் என்று சரமாரியாக வசைபாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

 

Get Breaking News Alerts From IndiaGlitz