close
Choose your channels

கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் பதில்!

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சுவை மிகுந்த மாம்பழத்தை சிலர் பயத்தினால் தொடுவதற்கே அஞ்சுகின்றனர். காரணம் மாம்பழம் ஒருசில நேரங்களில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி விடுவதாக பொதுவான ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில் மாம்பழத்தினால் உடலில் சூடு ஏற்பட்டு விட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மாம்பழத்தில் அதிகளவு எனர்ஜி நிறைந்து இருப்பதால் இதை வெயில் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கர்ப்பிணி பெண்கள்கூட இதைச் சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் மாம்பழத்தில் புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து ஆகியவை நிரம்பிய இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகளவு நார்ச்சத்து இருக்கும் மாம்பழத்தை சாப்பிடும்போது செரிமான உறுப்புகளுக்கு இது நல்லது. மேலும் மலச்சிக்கலை தடுத்து எளிமையான செரிமானத்திற்கு இது வழிவகுக்கிறது. கூடவே செரிமானத்திற்கு ஏற்ற என்சைமன் இந்த மாம்பழத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் சருமத்திற்கு இந்த மாம்பழம் மிகவும் நல்லது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் இது வயதான தோற்றத்தை தடுக்கிறது. கூடவே கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை இது பேணி பாதுகாக்கிறது.

மாம்பழம் மிகவும் குறைவான கொழுப்பு உள்ள பொருள் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரும் இதை சாப்பிடலாம். பெரும்பாலான டயட் உணவுகளில் இந்த மாம்பழம் இடம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாம்பழத்தில் வைட்டமன் பி6 இருப்பதால் ஹார்மோன்களை இது எளிதாக சமநிலைப்படுத்தி விடுகிறது. மேலும் மாதவிடாய் மற்றும் பிசிஓடி பிரச்சனைகள் வராமலும் இந்த மாம்பழங்கள் தடுக்கின்றன.

உயர்ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் இந்த மாம்பழத்தை சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம் இதில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி போன்றவை இருப்பதால் உயர்ரத்த அழுத்தத்தை இது சீர்ப்படுத்துகிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாம்பழம் தைராய்டு நோயாளிகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

மாம்பழம் குறைந்த சர்க்கரை அளவு கொண்ட கிளைசெமிக் குறியீட்டு உணவு வகையைச் சேர்ந்தது. எனவே இந்த மாம்பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தேவையான எனர்ஜியை மட்டும் தருகிறது.

மாம்பழத்தில் இயற்கையாகவே அக்சிஜனேற்றிகள் அதிகளவு இருப்பதால் புறஉதா கதிர்கள் வெளிப்படுத்தும் வெப்ப கதிர்வீச்சில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது. இதனால் வயதான தோற்றத்தை தவிர்க்க முடியும்.

கர்ப்பக் காலத்திலும் இந்த மாம்பழங்களைச் சாப்பிடலாம். காரணம் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி இதில் நிறைந்து இருப்பதால் அதிக ஊட்டச்சத்தினைப் பெறமுடியும். மேலும் ஃபோலிக் ஆசிட் கரு உற்பத்தியிலும் கருவளர்ச்சி காலத்திலும் மிகவும் தேவையான ஒரு விஷயமாக இருக்கிறது. அதேபோல ஆரம்ப கர்ப்பத்தில் நிகழும் நரம்பு குழாய் குறைபாடுகளை இந்த மாம்பழங்கள் தடுக்கின்றன.

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் இரத்தச் சோகையை மாம்பழங்களால் தடுக்க முடியும். கர்ப்பிணிகள்குக இந்த மாம்பழங்கள் இரும்புத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை கூட்டுகிறது. இதனால் ரத்தச்சோகைக்கு எதிராக போராட மாம்பழம் ஒரு சிறந்த பொருளாகவே இருக்கிறது.

மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி தொற்றுநோய் அபாயத்தையும் குறைக்க உதவும் மேலும் சிறந்த ஆற்றல் கொண்ட உணவாகவும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஒரு உணவாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம் திரவ சமநிலையை உடலில் பராமரிக்கிறது.

இத்தனை நன்மைகள் கொண்ட மாம்பழத்தை முறையான அளவில் சாப்பிடுவதும் நல்லது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஒருவேளை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். அதனால் காலை உணவு இருந்து இரவுக்கு முன்பு வரை இந்த மாம்பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற வீதத்தில் எடுத்துக் கொள்வதும் நலம்.

மேலும் பாதுகாப்பான முறையில் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். செயற்கையான ரசாயனங்களை வைத்து பழுக்க வைக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.