மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' ரிலீஸ் திட்டம்

  • IndiaGlitz, [Tuesday,October 18 2016]

ஓகே கண்மணி' வெற்றி படத்தை அடுத்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊட்டி, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு காதலர் தினத்தில் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விமான பைலட் வேடத்தில் கார்த்தி நடித்து இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜேபாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி விஜயகுமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் படமான உருவாகி வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

'தல 57' பாடல்கள் மற்றும் இசை பற்றி அனிருத் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்யா

தமிழ் திரையுலகின் சிறந்த நண்பர்கள் ஆர்யாவும் விஷாலும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய திரையுலகை அதிசயிக்க வைத்த 'பாகுபலி 2' வியாபாரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்தின் வியாபாரம் இந்திய திரையுலகையே அதிசயிக்க வைத்துள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில்..

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தின் வெளிவர வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கமல் ரசிகர்கள் மீது ஏன் புகார் கொடுக்கவில்லை?- சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த படமான 'ரெமோ' மட்டும் வெற்றி பெறவில்லை, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் அவர் அளித்த பதில்களை பார்க்கும்போது அவர் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவருடைய மெச்சூரிட்டியான பதில் அவருடைய மனித நேயத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது என்றும் நினைக்க தோன்றுகிறது.