சிம்பிளா சாரி கேட்டா உடனே உருகிடுவியா? மணிகண்டனின் 'ல்வ்வர்' டிரைலர்..

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் ‘லவ்வர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கும் மேலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லரில் மணிகண்டன் மற்றும் அவரது காதலிக்கு ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், பிரிவுகள், கோபதாபங்கள், சாரி கேட்பது, மீண்டும் இணைவது, ஊடல் போன்ற காட்சிகள் இருப்பதை பார்க்கும்போது ஒரு காதல் ஜோடிக்கு ஏற்படும் காதல் மற்றும் பிணக்குகள் குறித்த காட்சிகள் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

மொத்தத்தில் ஒரு சராசரியான காதல் படமாக இல்லாமல் இயல்பான ஒரு காதலர்களின் கதையை இயக்குனர் சொல்லியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனுபவம் ஒவ்வொரு காதலர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதால் படத்தோடு காதலர்கள் ஒன்றிணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இயக்குனர் பிரபு வியாஸ் திரைக்கதை சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் இந்த படம் ’குட்நைட்’ போலவே வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்த இந்த படத்தில் கண்ணார் ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.