“குடும்தபஸ்தன்” படம் மார்ச் 7 முதல் ZEE5ல்


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் ஷான்வி மேக்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ள குடும்தபஸ்தன் ! படம் டிஜிட்டலில் மார்ச் 7ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது !
மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள். திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை நாயகன் நவீன் (கே மணிகண்டன்), ஒரு கிராபிக் டிசைனர், வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா (ஷான்வி மேக்னா) கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை படு சிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் காமெடியாகவும் சொல்கிறது.
மோசமான வணிக முயற்சிகள், தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் திட்டம், மற்றும் அவனது மாமா ராஜேந்திரனின் (குரு சோமசுந்தரம்) உடனான சண்டைகள், என நவீனின் வாழ்வில் மேலும் மேலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், உண்மையையும் கலந்த அழகான இந்தக் கதையில், நவீன் தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறான் எந்த எல்லைக்குப் போகிறான் என்பதை படு சுவாரஸ்யமாகவும், காமெடியும் கலந்து சொல்கிறது இப்படம்.
குடும்தபஸ்தன் திரைப்படம் ZEE5ல் மார்ச் 7ல் ஸ்ட்ரீமாகிறது!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Ishaan Murali
Contact at support@indiaglitz.com