'லவ்வர்' படத்தை அடுத்து மணிகண்டனின் அடுத்த படம்.. தமிழில் அறிமுகமாகும் டோலிவுட் நாயகி..

  • IndiaGlitz, [Monday,December 18 2023]

’ஜெய்பீம்’ உட்பட சில படங்களில் அசத்தலான கேரக்டரில் நடித்து வந்த மணிகண்டன் முதன்முதலாக ’குட் நைட்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து அவர் தற்போது ’லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் பிரபு வியாஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக கௌரி பிரியா நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது என்பதும் இந்த படம் வரும் காதலர் தினத்தில் இந்த ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிகண்டன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்து உள்ளது. மணிகண்டனின் அடுத்த படத்தை ராஜேஷ்வர் காளிசாமி என்பவர் இயக்க இருப்பதாகவும் யூடியூபில் பிரபலமான இவர் முதன் முதலாக திரைப்பட இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பிரபல டோலிவுட் நடிகை சான்வி மேக்னா என்பவர் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இதுதான் இவரது முதல் தமிழ் படம் என்றும் கூறப்படுகிறது.

காமெடி மற்றும் குடும்ப என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் உள்பட சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

More News

'அயலான்' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்.. ரசிகர்கள் குஷி..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று பட தயாரிப்பு நிறுவனம் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்தது.

கேப்டனை எப்படி பாத்துகிடனும்ன்னு எங்களுக்கு தெரியும்: பாண்டிராஜுக்கு பிரேமலதா பதில்..

'கேப்டன் விஜயகாந்த்தை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்' என இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில்  'உங்கள் இலவச அறிவுரைக்கு நன்றி,

ஜீ டிவியின் 'சரிகமபதநீ' டைட்டில் வின்னரான இலங்கையின் இளங்குயில்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்த நிலையில் அதில் ஸ்ரீநிதி என்ற சிறுமி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்றும் அவருக்கு  60 லட்சம்

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? இசையமைப்பாளர் மாற்றமா?

 ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு அரவிந்த்சாமி

மாயா, பூர்ணிமா ஒண்ணா இருக்கக்கூடாது.. திடீரென போர்க்கொடி தூக்கும் விசித்ரா..!

பிக் பாஸ் ஏழாவது சீசனில் முதல் நாளிலிருந்து  மாயா மற்றும் பூர்ணிமா  ஒன்றாக இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்களுடைய கேங்கில் மேலும் சிலர் இருந்து வருவதை அடுத்து பலர் பாதிக்கப்பட்டனர்