BMW கார் வாங்கும் விஜய் டிவி பிரபலங்கள்: லேட்டஸ்ட்டாக இவர்தான்!

விஜய் டிவி பிரபலங்கள் வரிசையாக கார் வாங்கிக் கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் கார் வாங்கினார் என்பதும் அவருக்கு சக கலைஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் உள்ள தொடர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கினார். அந்த காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சமீபத்தில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நகைச்சுவை நடிகருமான பாலாஜி பிஎம்டபிள்யூ கார் வாங்கினார். அந்த வரிசையில் தற்போது மணிமேகலை புதிய BMW கார் வாங்கி உள்ளார். அவர் தான் வாங்கியுள்ள காரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படமாக பதிவு செய்துள்ள நிலை அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த முயற்சியில் அடுத்த சாதனை இந்த கார், விநாயகர் சதுர்த்தி தினத்தில் வாங்கிய கார்’ என்று மணிமேகலை பதிவு செய்துள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.