தனிமை அறையில் மணிரத்னம் மகன்: வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தாலும் தாக்காவிட்டாலும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுரை கூறிவரும் நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து அவர் அரசின் வேண்டுகோளை ஏற்று தனிமையில் இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து மணிரத்னம் மனைவியும் நடிகையுமான சுஹாசினி அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனினும் அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மணிரத்தினம் மகன் நந்தன் கூறியபோது ’தனிமையில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் 14 நாட்கள் இருப்பது நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது என்றும் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் வீடியோவை டுவிட்டர் நீக்கியது ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும் பிரதமர் மோடி அறிவித்திருந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிக்க கோரியும்

ரஜினியின் பதிவு தவறுதான்: தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே

சுய ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தெருவில் நடந்த திருமணம்

இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல்

இன்று ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதுமா?

கொரோனா வைரஸ் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை

தன்னை தானே தனிமை படுத்திகொண்ட மணிரத்னத்தின் மகன்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா Covid-19 (novel வைரஸ் ஒருவரது உடலில் 14 நாட்கள் வரையிலும் தங்கிவாழும் தன்மைக் கொண்டது