பிரமாண்டம் என்றால் இதுதான்: 'பொன்னியின் செல்வன்' டீசர் ரிலீஸ்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ டீசர் இன்று மாலை சரியாக ஆறு மணிக்கு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவல் ஐந்து பாகங்கள் கொண்டது என்பதும் இந்த நாவலை படிக்காதவர்கள் மிகக் குறைவு என்பதும் தெரிந்ததே.

இந்த நாவலைப் படிக்கும்போது ஒவ்வொரு கேரக்டரையும் தங்களது மனதில் கற்பனையாக நினைத்து படிக்கும்போதே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் என்பதும் அந்த அளவுக்கு அமரர் கல்கியின் எழுத்து மற்றும் வர்ணனை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை படித்த போது ஏற்பட்ட முழு திருப்தியை திரைக்கு கொண்டு வருவது என்பது சவாலான காரியம் என்ற நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ எந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தும் என்ற கேள்வி இருந்தது

ஆனால் அந்த கேள்வி தற்போது தவிடுபொடியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசரில் உள்ள பிரம்மாண்டமான காட்சிகள், ஒவ்வொரு கேரக்டர்களையும் மணிரத்னம் கையாண்ட விதம், ஆக்ரோஷமான போர் காட்சிகள், ஆச்சரியமான கிராபிக் காட்சிகள் ஆகியவை பொன்னியின் செல்வன் நாவலுக்கு இணையாக திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது தெரியவருகிறது. குறிப்பாக மணிரத்னம், நந்தினி கேரக்டரை எப்படி கையாள்வார் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருந்த நிலையில் டீசரில் உள்ள நந்தினி காட்சிகள் ஆச்சரியத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.

இதனையடுத்து இந்த படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்றும், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரசிகர்களுக்கு சவால் வீடியோ வெளியிட்ட சன்னிலியோன்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழில் அவர் நடித்து வரும் ' ஓ மை கோஸ்ட்' எ

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடி: புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சியிலும் வாய்ப்புகள் பெற்று சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த முதல்வர் ஸ்டாலின்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த சில காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என்பது உண்மையா? மேனேஜர் விளக்கம்!

நடிகர் விக்ரம் சற்று முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு என ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில்

'பொன்னியின் செல்வன்' அருள்மொழி வர்மன் போஸ்டர்: ஜெயம் ரவி கூறியது என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று