மணிரத்னம் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து ஆலயம் புரடொக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் ஸ்ரீராம். இந்த நிறுவனத்தின் சார்பில் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்', மணிரத்னம் இயக்கிய 'திருடா திருடா', 'பம்பாய்' போன்ற வெற்றிப் படங்கள் தயாரிக்கப்பட்டன.

மேலும் அஜித் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான 'ஆசை' திரைப்படமும் இந்த நிறுவனம் தயாரித்த படம்தான் என்பதும், இந்த படம் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்பதும் குறிப்பிடதக்கது. ஆலயம் நிறுவனம் தயாரித்த கடைசி படம் விக்ரம் நடித்த 'சாமுராய்' ஆகும்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராம் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நளினி என்ற மனைவியும் நிகில் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நடிகர் விஜய் திமுகவில் சேர்ந்தால்.... அமைச்சர் ஜெயகுமார் பேட்டி!

நடிகர் விஜய் இதுவரை எந்த ஒரு மேடையிலும் தான் அரசியலில் சேருவதாகவோ, ஏதாவது அரசியல் கட்சியில் இணைய விரும்புவதாகவோ கூறியதே இல்லை.

விஜய்சேதுபதியின் 'லாபம்' படத்தில் இணைந்த இளம் ஹீரோ

நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் சுமார் எட்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று

'நான் தான் டைட்டில் வின்னர்', கப்பு எனக்குத்தான்: வனிதாவுக்கு டப்பிங் பேசும் சாண்டி

பிக்பாஸ் வீட்டில் கவின் தலைமையில் ஒரு குழுவும், வனிதா தலைமையில் ஒரு குழுவும் இயங்கி வரும் நிலையில் வனிதாவின் குழுவில் தற்போது

கவுதம் மேனனின் 'ஜெயலலிதா' தொடரின் டைட்டில்!

Read more at: https://www.sify.com/movies/gautham-menons-biopic-on-jayalalithaa-titled-queen-news-tamil-tjekgRdiaagjg.html

வரலாறு காணாத விலையில் தங்கம்: ரூ.30 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சி

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் இவ்வருட இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும் என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.