close
Choose your channels

மணிரத்னம் படத்தின் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பம்

Friday, November 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸிங் பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கோவாவில் இன்று முதல் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகியோர் இணைந்து பாடல் கம்போஸிங் பணியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத்பாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.