close
Choose your channels

பொன்னியின் செல்வன் லுக்கில் அசத்தும் நடிகர்கள்....! இணையத்தையே அலறவிடும் புகைப்படங்கள்...!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும், காதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றன.

இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், சுந்தரசோழனாக பிரகாஷ் ராஜ், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்,  நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தமிழ் சினிமாவில்  அதிகளவில் பொருட்செலவில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

எழுத்தாளர் கல்கி அவர்களின் நாவலை தழுவியே இப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை இயக்குவதையே இயக்குனர் மணிரத்னம் வாழ்நாள் கனவாக வைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து குமாரவேல் திரைக்கதைக்கு பெருமளவில் உதவியுள்ளார். மாபெரும் பட்ஜெட் திரைப்படம் என்பதால், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம்  இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

அண்மையில் தான் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்  வெளியாகி இணையத்தில் வைரலானது.  இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவு செய்த படக்குழு, முதல் பாகத்தை வரும் 2022-ல் வெளியிட உள்ளது. இது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு திரைவிருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் கற்பனை ஓவியங்கள் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தையே கலங்கடிக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.