close
Choose your channels

உதயநிதியின் 'மனிதன்' - திரைமுன்னோட்டம்

Thursday, April 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகிய நிலையில் நாளை அவருடைய அடுத்த படமான 'மனிதன்' வெளியாகவுள்ளது. 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து காமெடி கலந்த ஹீரோ கேரக்டரில் நடித்து வரும் உதயநிதி நடித்துள்ள மற்றொரு திரைப்படம்தான் 'மனிதன்'
ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்த 'என்றென்றும் புன்னகை' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அஹ்மத் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலிவுட்டில் ஹிட்டாகிய 'ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் 'மனிதன்' என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருகல் ஒருகண்ணாடி' படத்திற்கு பின்னர் உதயநிதியுடன் மீண்டும் ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம், உதயநிதி படத்திற்கு முதன்முதலாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்த படம், மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'காக்கா முட்டை' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், பழம்பெரும் நடிகர் ராதாரவி மற்றும் உதயநிதியின் மாமாவாக நடித்திருக்கும் சின்னக்கலைவாணர் விவேக் ஆகியோர் இந்த படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளனர்.
இதுவரை உதயநிதியின் படங்களில் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் இந்த படத்தில் மிஸ்ஸிங் என்றாலும் அந்த குறையை போக்குவதற்காக விவேக் இந்த படத்தில் காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தை ஏற்று நடித்துள்ளார்.
மதியின் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.