விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பாரில்' இணைந்த இளம் நடிகை!

  • IndiaGlitz, [Monday,August 05 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார் என்பதையும், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடிக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இளம் நடிகை மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தற்போது தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மஞ்சிமாவுக்கு என்ன கேரக்டர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மஞ்சிமா மோகன் ஏற்கனவே சமீபத்தில் அருள்நிதி-ஜீவா இணைந்து நடிக்கும் 'களத்தில் சந்திப்போம்' என்ற திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே.

More News

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட்ப்பிரிவு நீக்கம்: அமித்ஷா அரசாணை

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். 

அபிராமியால் டென்ஷன் ஆன முகின்: உடைந்த பிக்பாஸ் வீட்டின் பொருட்கள்

கடந்த வாரம் முழுவதும் கவின், சாக்சி, லாஸ்லியா முக்கோண காதல் அனைவருக்கும் திகட்டும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஓடிய நிலையில் இந்த வாரம் இந்த அலை சற்று ஓய்ந்துள்ளது.

சாக்சி வெளியேறாதது ஏன்? ரேஷ்மாவிடம் விளக்கிய கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கவின், லாஸ்லியா மட்டுமன்றி ஒட்டுமொத்த போட்டியாளர்கள் அனைவரையும் வெறுப்பேற்றிய சாக்சி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேறுவார்

ஆகஸ்ட் 11 முதல்... ஜிவி பிரகாஷின் அடுத்த பட அப்டேட்

இந்த ஆண்டு 'சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில்

தனுஷ் வெளியிட்ட 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது படைப்பாக தயாரிக்கும் திரைப்படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்க உள்ளதாக