close
Choose your channels

இந்த குட்டி பாப்பாக்களில் மஞ்சிமா மோகன் யார்? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய ’அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின்னர் அவர் ’சத்ரியன்’ ’இப்படை வெல்லும்’ ’தேவராட்டம்’ ’களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மஞ்சிமா மோகனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது பள்ளி கால தோழிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’ஒரு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்’ என்று கேப்ஷனுடன் மஞ்சிமா மோகன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் மஞ்சிமா மோகன் யார் என்பதை கண்டுபிடித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தில் மஞ்சிமா மோகன் யார் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz