'மாநாடு' படத்தில் மனோஜ் பாரதியின் கேரக்டர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 11 2020]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். மேலும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சிம்பு மற்றும் மனோஜ் பாரதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. மனோஜ் பாரதி இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. போலீஸ் வேடத்தில் உள்ள மனோஜ் பாரதி ஆகிய சிம்பு இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருவதை அடுத்தே மனோஜ் பாரதி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவரும் இந்த படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

லண்டனில் கணியன் பூங்குன்றனின் வேட்டை: துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கி வந்த 'துப்பறிவாளன் 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் சென்னையில்

கமல், ஷங்கர் இல்லாமல் நடந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த 'இந்தியன் 2'படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம்.

தனுஷ் செய்த தாய்மாமாவின் கடமை: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தவர்

நானும் ரவுடிதான்' நடிகருக்கு நிதியுதவி செய்த விஜய்சேதுபதி!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் சமீபத்தில் உடல்நலமின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை