ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? உண்மையான சோழ வரலாற்றை விளக்கும் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

எழுத்தாளர் கல்கியின் உயரிய படைப்பான பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் இதைத் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்துவதற்காகப் பல பிரபலங்கள் முயற்சித்தனர். என்றாலும் இறுதியில் அது இயக்குநர் மணிரத்தினத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

இந்நிலையில் கல்கி எழுதிய நாவலை இயக்குநர் மணிரத்தினம் சில இடங்களில் மாற்றிக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதேபோல பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் ஆதித்த கரிகாலன் எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியே முதன்மையாக அமைத்து கதை நகர்ந்திருக்கும். ஆனால் மணிரத்தினம் காட்சிப்படுத்திய பொன்னியின் செல்வன் திரைப்படம் யாரால் கொல்லப்பட்டார் என்ற அளவில் சுருங்கி இருக்கிறது. மேலும் கரிகாலனின் இறப்புக்குப் பிறகு சோழ அரியணையில் மதுராந்தகர் அமரவைக்கப்பட்டார் என்று திரைப்படம் சொல்கிறது.

ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் மதுராந்தகர் சோழ அரியணை ஏறவில்லை என்ற முரண்பாடான கதையமைப்பு இருக்கிறது. இப்படி பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையில் உண்மையில் சோழ பட்டத்து இளவரசன் ஆதித்தக் கரிகாலனை கொன்றது யார்? அவர்கள் சோழ ராஜ்ஜியத்தில் இருந்தவர்களா? அல்லது பாண்டிய தேசத்தில் இருந்து வந்தவர்களா? என்று வரலாற்று அறிஞர்கள் அலசி வருகின்றனர்.

இப்படி சோழ வம்சத்தையும் சுற்றியும் ராஜ்ஜியத்தையும் சுற்றியும் பல்வேறு கேள்வி கணைகள் இருந்துவருகின்றன. இந்நிலையில் உண்மையான சோழ வரலாறு குறித்தும் ஆதித்தக் கரிகாலனை கொன்றது யார்? என்பதையும் வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறார் தமிழ் ஆர்வலர் மன்னன் மன்னன். அவருடைய நேர்காணல் வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் கவனம் பெற்றுவருகிறது.