close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய்யின் 'பிகில் படத்தில் காமெடி நடிகர் மனோபாலா ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், இதுகுறித்த தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழக பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்துள்ள இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.