அஜித், விஜய் படங்களை இயக்காமல் இருந்திருந்தால்? அட்லி, எச்.வினோத் மீம்ஸ்க்கு மனோபாலா கருத்து

விஜய் படங்களை அட்லீயும், அஜித் படங்களை எச் வினோத்தும் இயக்காமல் இருந்தால் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்தவிதமான வரவேற்பு இருந்திருக்கும் என்பது குறித்த மீம்ஸ்க்கு நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார்

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். அதேபோல் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் ’ஏகே 61’ படங்களை இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருக்கிறார்

விஜய் படங்களை இயக்கியதால் அட்லி மீது அஜித் ரசிகர்களும், அஜித் படங்களை இயக்கியதால் எச்.வினோத் மீது விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது கடுமையான வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று ஒரு மீம்ஸ் கடந்த சில தினங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த மீம்ஸ் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய நடிகரும் இயக்குனருமான மனோபாலா ’உண்மை’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

முன்னதாகவே அறிவிக்கப்பட்ட 'கோப்ரா' ரிலீஸ் தேதி!

சியான் விக்ரம் நடித்த 'கோப்ரா'  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.6 கோடி மதிப்பில் மெர்சிடஸ் கார் வாங்கிய பிரபல நடிகை: வீடியோ வைரல்

பிரபல நடிகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் காரை வாங்கி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது.

கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்

 'ஆர்.ஆர்.ஆர்' நாயகன் ஜீனியர் என்டிஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் 'என்.டி.ஆர் 31' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ஏப்ரல் 2023-ல்  படபிடிப்பு

ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன வயதில் ஒரு தங்கச்சியா? புகைப்படம் வைரல்

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு சின்ன வயதில் ஒரு தங்கச்சியா? என நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு

கதையே மாறிவிட்டது, இதுதான் புதிய இந்தியா: பிரதமர் மோடி குறித்து மாதவன் பேச்சு!

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது பேரழிவு என பொருளாதார வல்லுனர்கள் கூறிய நிலையில் கதையே மாறிவிட்டது என்றும், இதுதான் புதிய இந்தியா எனவும் கேன்ஸ் விழாவில் நடிகர் மாதவன் பேசியுள்ளார்