close
Choose your channels

ஸ்டண்ட் சில்வாவுக்கு கிடைத்த பெருமைக்குரிய விருது!

Monday, May 6, 2019 • தமிழ் Comments

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சில்வா, தமிழ் திரையுலகில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டண்ட் காட்சிகளில் அனல் பறக்கும். பல படங்களில் அவரே ஸ்டண்ட் கலைஞராக நடித்தும் இருக்கின்றார்.

இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'லூசிஃபயர்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகள் அமைத்ததற்காக அவருக்கு சிறந்த ஸ்டண்ட் இயக்குனருக்கான 2019ஆம் ஆண்டின் மனோரமா விருது கிடைத்துள்ளது.

இந்த தகவலை ஸ்டண்ட் சில்வா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

Get Breaking News Alerts From IndiaGlitz