மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா?

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் மறைந்தபோது பேட்டியளித்த பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்

அதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூரலிகான் சென்னை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமின் மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று தான் கூறவில்லை என்று மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஆதாருடன் பான் கார்டை இணைக்காமல் விட்டால் என்ன நடக்கும்? விளக்கம் அளிக்கும் வீடியோ!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்ட் வைத்து இருக்கும் இந்திய குடிமகன்கள் அனைவரும் கட்டாயம் தங்களது பான் கார்ட் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு  தெரிவித்து இருந்தது.

பட்டாசு கடை விபத்தில் மகன்களைப் பறிக்கொடுத்த தாய்… ரயில் முன்பாய்ந்த பரிதாபம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் கடையின் உரிமையாளர்

நோ எண்ட்ரி போர்ட் மாட்டிய நித்தியானந்தா… இந்தியர்களுக்குமா இந்த அவலம்?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை தீவிரம் பெற்று இருக்கிறது

தல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கொரோனா

ஒரு படுக்கைக்கு 50 நோயாளிகள் வரிசைக்கட்டி நிற்கும் அவலம்… என்ன நடக்கிறது உ.பி.யில்?

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் பல வட மாநிலங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.