ஏன் இந்த சோதனை.. உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன்.. உருக்கமாக வெளியிட்ட அறிக்கை..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது நிலையை நினைத்து உருக்கமாக மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி ... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு.

யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய் ! மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய் ! மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர். எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா ...100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே...வாழிய வாழிய நூறாண்டு '!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்!

இவ்வாறு கண்ணீருடன் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now

More News

சிம்பு ரேஞ்சுக்கு பேசுறீங்க.. அந்த அளவுக்கு இன்னும் போகல.. அசோக்செல்வனின் 'சபாநாயகன்' டிரைலர்..!

அசோக் செல்வன் நடிப்பில் உருவான 'சபாநாயகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில்

முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறை: 'பருத்திவீரன்' விவகாரத்தில் 2 இயக்குனர்கள் கண்டனம்..!

கடந்த சில நாட்களாக 'பருத்தி வீரன்' விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் அமீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஞானவேல் ராஜா தனது வருத்தத்தை தெரிவித்தார்.

தலையை வெட்டி கையில் எடுத்து செல்லும் விஷால்.. ஹரி படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர்..!

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரகாசமாக எரியும் அணைய போகிற விளக்கு.. கடைசி நேரத்தில் ஆவேசமாக சண்டை போட்ட ஜோவிகா ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அணைய போற விளக்கு கடைசி நேரத்தில்  பிரகாசமாக எரிவது போல் கடைசி

காதலியை மணந்தார் சன் டிவி சீரியல் நடிகர்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து..!

சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சின்னத்திரை உலக பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை