த்ரிஷா விவகாரம்.. திடீரென நீதிமன்றம் சென்ற மன்சூர் அலிகான்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

நேற்று த்ரிஷா வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று இது குறித்து விசாரணை செய்ததாகவும் இன்று மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், முன் ஜாமீன் கோரி மனு கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இன்றைய விசாரணைக்கு பின் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

மீண்டும் இணைகிறதா 'பீஸ்ட்' டீம்? விஜய்க்காக காத்திருக்கும் 2 பிரபல இயக்குனர்கள்..!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பீஸ்ட்'. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை

மூன்றாவது பூகம்ப டாஸ்க்கிலும் தோல்வி.. அடுத்து நடக்கவிருக்கும் பரபரப்பான நிகழ்வுகள் என்ன?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மூன்று பூகம்ப டாஸ்குகளை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இந்த மூன்றிலும் போட்டியாளர்கள் வெற்றி

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ்.. ரன்னிங் டைம் 3.21 மணி நேரம்..!

வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும்  இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும்

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறது.

நீ தனியா வந்தா தலை மட்டும் தான் உருளும்: 'கேப்டன் மில்லர்' சிங்கிள் பாடல்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.