close
Choose your channels

உலகை சுற்றிய மேரல் லாசர்லூ இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித்!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தல அஜித் அவர்கள் உலகை பைக்கில் சுற்றிய மேரல் லாசர்லூ என்பவரை டெல்லியில் சந்தித்தார் என்பதும் அவருடைய அனுபவங்களை கேட்டு அறிந்தார் என்றும் வெளியான செய்திகளை பார்த்தோம். மேலும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 கண்டங்கள் 64 நாடுகளை மேரல் லாசர்லூ பைக்கில் பயணம் செய்த அனுபவங்களை கேட்டறிந்த தல அஜித், விரைவில் உலக நாடுகளை பைக்கில் சுற்றி உலகம் சுற்றும் வாலிபனாக மாற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜீத் சுமார் பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பைக்கில் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேரல் லாசர்லூ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ’என்னுடைய உலக சுற்றுப்பயணம் குறித்து விரைவில் எழுத போகிறேன். அஜித் அவர்களை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய உலக பைக் பயணத்தை பற்றி அஜித் அவர்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.