ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு. மாறன் சகோதரர்களுக்கு அளிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் சற்று முன் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இந்த வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட அனைவர் மீதும் சாட்டப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சி.பி.ஐ. நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது.

முன்னதாக மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுப்பப்பட்டது.

இதுகுறித்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.

இதையடுத்து சற்று முன்னர் தீர்ப்பளித்த நீதிபதி மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரையும் விடுவித்தார்.

More News

6 விக்கெட்டுக்கள் எடுத்த சஹலை தோனி திட்டியது ஏன்?

இந்தியா, மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மும்பையில் மோதிய 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா கொடுத்த 203 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து எட்டிவிடும் என்றுதான் முதல் பத்து ஓவர்களை பார்த்தவர்கள் ஊகித்திருப்பார்கள்....

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் மனிதாபிமானமின்றி புகைப்படம் எடுத்த பொதுமக்கள்.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் போலீஸ், கோர்ட் என்று அலைய வேண்டிய நிலை வரும் என்றுதான் பலர் அதில் ஈடுபடுவதில்லை. இதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது...

'விவேகம்' டைட்டிலில் மொபைல் நம்பரா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது...

காதலியை தீ வைத்து, தானும் தீக்குளித்த கல்லூரி மாணவன்

கேரளாவில் காதலியை கல்லூரி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தானும் தீக்குளித்து மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்தின் சஸ்பெண்ட். விஷால் எடுத்த அதிரடி முடிவு

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சங்க செயலாளர் விஷாலை தயாரிப்பாளர் சங்கம் சஸ்பெண்ட் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சஸ்பெண்டை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...