ஒரே ஜாதியா இருந்தாலும் தலக்கட்டு வேற வேற தான.. 'மார்கழி திங்கள்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த டிரைலரில் பள்ளியில் படிக்கும் போது இரண்டு பேர் காதலிக்கின்றனர், அந்த காதல் இரு குடும்பத்திற்கு இடையே ஏற்படும் பிரச்சனை, ஜாதி விவகாரம் மற்றும் அந்தஸ்து விவகாரம் காரணமாக பிரிக்கப்படுகிறது

இதனை அடுத்து காதலர்கள் என்ன ஆனார்கள்? காதலர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் அவமானங்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

நாயகியின் தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜா வழக்கம்போல் தனது மெருகேற்றிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆன இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் ஷ்யாம் செல்வன் மற்றும் ரக்ஷனா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது இசைஞானி இளையராஜா தான். பின்னணி இசையில் அசத்தியுள்ளார். மொத்தத்தில் மனோஜ் பாரதிராஜாவின் முதல் படமே வெற்றிப் படம் என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

More News

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸ் 'மை3': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது !!

'ஹேய்.. கர்மான்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? கார்த்தியின் 'ஜப்பான்' பட வீடியோ..!

கார்த்தி நடித்த 'ஜப்பான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக கூறி வீடியோ

இரண்டு விதமான 'லியோ' ரிலீஸ்.. புதிய அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்: மறக்க முடியாத பரிசளித்த பா ரஞ்சித்..!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று காலை நடந்த நிலையில் சற்று முன் இருவரும் இணைந்து நடித்த படத்தின் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சொந்த வாழ்க்கையை வெப்தொடரை தயாரித்து இயக்கும் கவர்ச்சி நடிகை.. டைட்டில் இதுதான்..!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை தனது சொந்த வாழ்க்கையை வெப்தொடராக தயாரித்து, இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.