மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் 'பைசன் காளமாடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சற்றுமுன், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், புதிய போஸ்டரும் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, எழிலரசு ஒளிப்பதிவு மற்றும் சக்தி திரு படத்தொகுப்பில் உருவாகும் இப்படம், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது. இதனால், படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் நடித்த ‘மகான்’ திரைப்படம் 2022-ஆம் ஆண்டு வெளியான நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய அடுத்த திரைப்படமாக ‘பைசன் காளமாடன்’ வெளியாக உள்ளதை குறிப்பிடலாம்.
இந்த படம், துருவ் விக்ரத்திற்கு தமிழ் திரையுலகில் ஒரு நிலையான இடத்தை உருவாக்கித் தரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
In a land of chaos, one player dares to dream 🔥#BisonKaalamadan will light up screens this Diwali, October 17 🎆#BisonKaalamaadanOnOct17@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @mari_selvaraj @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector… pic.twitter.com/Abh1Ixxbhq
— Think Music (@thinkmusicindia) May 3, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments