மாரி செல்வராஜின் 'வாழை': படப்பிடிப்பை தொடங்கி வைத்த உதயநிதி எம்.எல்.ஏ

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார். தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

More News

மாரி செல்வராஜின் அடுத்த படம் இதுதான்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு

 பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர்

'தேங்க்யூ தனா.. கோபமாக பேசிய தனலட்சுமியிடம் நாகரீகமாக நடந்து கொண்ட ஷிவின்!

 பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் தன்னிடம் தனலட்சுமி கோபமாக பேசிய போதிலும் தேங்க்யூ என கூறிவிட்டு நாகரீகமாக அந்த இடத்தை விட்டு சென்ற காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளன.

'நான் யாரையும் தலைவரா ஏத்துக்க முடியாது: தனலட்சுமி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் தலைவர் டாஸ்க் நடத்தப்படும் என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் அந்த வாரத்தின் தலைவராக பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்பதும் தெரிந்ததே.

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் வெளியான திரைப்படங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்கள் வரை ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர்தாஸ்

நடிகை நீது சந்திராவை தரதரவென தரையில் இழுத்து செல்வது யார்? வைரல் வீடியோ

 நடிகை நீது சந்திராவை தரதரவென தரையில் இழுத்துச் செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.