மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் முதல் விமர்சனம்.. படம் பார்த்த பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் ’வாழை’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படமும் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாரி செல்வராஜுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு ’வாழை’ படத்தை சமீபத்தில் பார்த்தேன் என்றும் இந்த படத்தை பார்த்து அதிர்ந்து விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ’வாழை’ படத்தின் முதல் விமர்சனமாக சந்தோஷ் சிவனின் டுவிட் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சிறுவர் சினிமாவாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை லைலா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அஜித், சூர்யா, விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் லைலா என்பதும் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக 'பிதாமகன்' திரைப்படத்தில்

ஹோலி கொண்டாடிவிட்டு பாத்ரூமில் ஒன்றாக குளித்த தம்பதிகள் மர்ம மரணம்.. என்ன நடந்தது?

ஹோலி கொண்டாடிவிட்டு தங்கள் மீது உள்ள கலர் பொடிகளை நீக்குவதற்காக குளித்து கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் சீசன் 9; பைக்குகளை வெல்ல போட்டியாளர்கள் போட்டி !

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் நடந்து வருகிறது என்பதும் இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்

'பொன்னியின் செல்வன் 2': த்ரிஷா, ஐஸ்வர்யா ராயின் செம வீடியோ ரிலீஸ்..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்,

வெளிநாட்டு ஸ்டண்ட் டீம் உடன் கமல்ஹாசன்.. 'இந்தியன் 2' படத்தின் மாஸ் புகைப்படம்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று