'லியோ' படம் பார்த்த மாரி செல்வராஜ்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,October 22 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது.

இருப்பினும் வசூலில் இந்த படம் தொடர்ந்து சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படம் தொடர்ச்சியாக விடுமுறை நாள் என்பதால் அதிக வசூல் செய்து வருவதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் பார்த்து படக்குழுவினர்களை வாழ்த்திய நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் ’லியோ’ படத்தை பார்த்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

’லியோ’ படத்தை பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பாக லியோ தாஸ் கதாபாத்திரம் உண்மையில் மிரட்டலாக இருப்பதாகவும் படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

போறதுன்னா போயிகிட்டே இருக்க வேண்டியதுதானா.. கமல் முன் பிரதீப் கலாய்த்தது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறப் போகிறார்.

'லியோ' படத்தில் வனிதா மகன் நடித்திருக்கிறாரா? வைரல் புகைப்படம்..!

நடிகை வனிதாவின் மகன் 'லியோ' படத்தில் நடித்திருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'லியோ' அப்டேட் போதும், அடுத்து 'தளபதி 68' அப்டேட்.. விஜய் ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் அடுத்த படமான 'தளபதி 68' படத்தின் அப்டேட்கள் வெளிவர இருக்கிறது.

'மாயா, எவ்வளவு கல்லு வச்சிருக்கிங்க.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கேள்வி..

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர்

'தளபதி 68' படத்தை அடுத்து இன்னொரு பிரபல நடிகருடன் பிரியங்கா மோகன்..

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், அந்த படத்தின் வெற்றி காரணமாக பல படங்களில் நடித்து வருகிறார்