பட்டதே போதும்… ஐபிஎல் ஏலத்தில் இருந்து திடீரென விலகிய சிஎஸ்கே வீரர்!
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் மார்க் வுட். இவர் கடந்த 2018 இல் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்டு பெரும்பாலும் பெஞ்சிலேயே அமர்ந்து இருந்தார். சிறந்த பவுலரான இவருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் கலந்து கொள்வதை தவிர்த்தார். பின்னர் சிஎஸ்கே அணியில் இருந்தும் விலக்கப் பட்டார்.
இந்நிலையில் தற்போது 2021 க்கான மினி ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட இவர், நேற்று திடீரென தனது பெயரை நீக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார். இதனால் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 292 பெயர்களில் இருந்து மார்க் வுட்டின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மார்க் வுட்டின் இந்த முடிவுக்கு சிஎஸ்கே தான் காரணம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஐபிஎல் 14 ஆவது டி20 போட்டிக்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 ஐபிஎல் அணிகளும் சேர்ந்து மொத்தம் 61 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளனர். ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்த ஏலத்திற்கு பதிவு செய்து இருந்தாலும் வெறும் 292 வீரர்களின் பெயர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. மார்க் வுட்டின் விலகலை அடுத்து இநத்ப் பட்டியல் 292 ஆக சுருங்கி உள்ளது. இந்நிலையில் மார்க் வுட்டின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.