சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரியதால் கூட்டப்பட்ட சட்டசபை பெரும் அமளியாகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடந்த நிகழ்வுகளை கவனித்து வரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, 'தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் சரியாக செயல்படவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சரியாக 11 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்றும் ஆட்சி நீடிப்பது குறித்த முடிவு அடுத்த 15 அல்லது 20 நிமிடங்களுக்குள் தெரிந்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

More News

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சற்றுமுன் நடந்த சம்பவங்களாக இருந்த நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம். சட்டை கிழிந்திருந்ததால் பரபரப்பு

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் போராட்டம்.

சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ரகசிய வாக்கெடுப்பு: திமுக-ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கம்

ஓபிஎஸ் அணியின் கொறடாவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் முழக்கம் செய்கின்றனர்.

முதல்வர் உரை தொடங்கிய அடுத்த நிமிடம் அமளி துமளி. சட்டசபையில் பரபரப்பு

பெரும் பரபரப்புக்கு இடையே தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் சற்றுமுன் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது, இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.