close
Choose your channels

இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு காதல் புரபோசல்

Monday, July 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், 10 ஆயிரம் ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனி இணைந்தார்.

இந்த நிலையில் இந்த போட்டியை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு திடீரென ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. ஒரு இளைஞர் தனது காதலிக்கு ஒரு மோதிரத்தை கொடுத்து காதல் புரபோசல் செய்ய, அந்த பெண், மோதிரத்தை வாங்கி கொண்டு அவருடைய காதலை ஏற்று கொண்டார். இந்த காதல் புரபோசலை தற்செயலாக பார்த்த கேமிராமேன், அவர்கள் பக்கம் கேமிராவை திருப்ப, கோடிக்கணக்கானோர் இந்த காதல் புரபோசலை நேரலையில் ஆச்சரியமாக பார்த்தனர்.

அந்த பெண் காதலை ஏற்றுக்கொண்டதும் இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்த அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் போட்டியை பார்க்காமல் காதலர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த உணர்ச்சிகரமான காதலர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.