ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஏஞ்சலினா ஜோலியின் திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடித்த ’எட்டர்னல்ஸ்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெம்மா சென், ரிச்சர்ட் மேடன், ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’எட்டர்னல்ஸ்’ படம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்பதும் கடந்த நவம்பர் மாதம் இந்த படம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வெளியாகி 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’எட்டர்னல்ஸ்’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்த படம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ளவர்களின் ரசிகர்களுக்காக ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை அதிதிஷங்கரின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் கார்த்திக் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விருமன்' என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பதும், இந்தப் படம் விரைவில்

நீண்ட இடைவெளிக்கு பின் அமலா நடித்த 'கணம்' படத்தின் டீசர்!

கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த 80கள் மற்றும் 90களின் நாயகியான அமலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்த 'கணம்' திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இருசக்கர

அஜித்தின் 'வலிமை' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள்

அமீரிடம் நிரூப் கேட்ட சாட்டையடி கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீரிடம் நிரூப் கேட்ட சாட்டையடி கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது