'96' 'மெய்யழகன்' இயக்குனர் ராம்குமார் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? விரைவில் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


'96' மற்றும் 'மெய்யழகன்' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ மற்றும் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த ‘மெய்யழகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும், தமிழ் சினிமாவின் தரமான படங்களாக பார்க்கப்படுகிறது.
வசனங்கள் அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியும் உணர்வு பூர்வமாக இருக்கும் என்பதும், காதல் தோல்வியை மிக அழகாக ’96’ படம் காட்டியது என்றும், உறவுகளின் புனிதத்தை ‘மெய்யழகன்’ படத்தில் பிரேம்குமார் சிறப்பாக காட்டியிருந்தார் என்றும் கூறலாம்.
இந்த இரண்டு படங்களுமே காதலர்கள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடிய படங்களாக இருந்ததுடன், வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் அடுத்த படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேம்குமார் கூறிய கதையை விக்ரம் கேட்டு ஆச்சரியப்பட்டதாகவும், உடனே “இந்த கதையை டெவலப் செய்யுங்கள்; விரைவில் படப்பிடிப்பு தொடங்குவோம்” என கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, விக்ரம் மற்றும் பிரேம்குமார் இணையும் புது படம் குறித்த அறிவிப்பு, இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com