close
Choose your channels

'அஜித் 61' படத்தில் இணையும் பிரபலம்: மாஸ் தகவல்!

Friday, April 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ’வலிமை’ படத்தில் மிகச் சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது போல் இந்த படத்திலும் மாஸ் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளையை பற்றிய படம் என்றும் ’மணி ஹெய்ஸ்ட்’ பாணியில் படம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.