'மாஸ்டர்' படத்தின் 'மாஸ்' வீடியோ: 50வது நாளில் ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து!

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’மாஸ்டர்’, இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வசூலில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி சக்கைபோடு போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. லாக்டவுனுக்கு பின்னர் ஒரு திரைப்படம் 50 நாட்கள் திரையரங்குகளில் திரையிடப்படுவது என்ற சாதனையையும் ’மாஸ்டர்’ திரைப்படம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ’மாஸ்டர்’ படத்தின் 50வது நாள் விழாவை விஜய் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் உள்ளன. குறிப்பாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில மாஸ் காட்சிகளும் உள்ளன என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

யானைகளின் வீட்டில் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்: 'காடன்' டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி!

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வந்த 'காடன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகளும் இறுதிகட்டத்தில் உள்ளன

தனுஷ் பட நாயகி வீட்டில் வருமான வரி சோதனை!

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன்பின்னர் அஜித்தின் 'ஆரம்பம்' ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 2', ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை'

சென்னையில் ராதிகா போட்டி: எந்த தொகுதியில் தெரியுமா?

சமீபத்தில் 'சித்தி' எந்த தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகிய நடிகை ராதிகா முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியானது.

தமிழகம் பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு,

ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே காரில் 25 பேர் பயணம் செய்து உள்ளனர்.