கொரோனா விடுமுறையில் பால் கறக்க கற்று கொண்ட 'மாஸ்டர்' நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தீனா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் இந்த விடுமுறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது குறித்த நகைச்சுவையான மற்றும் சீரியஸான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் ’கைதி’ ’மாஸ்டர்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் தீனா தனது வீட்டில் மாடுகளுக்கு பால் கறந்து கொண்டு இருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ’வீட்டில் வேலை பார்த்து எத்தனை நாள் ஆச்சு’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு உள்பட பலரது நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டாலும் கொரோனா பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on Apr 4, 2020 at 2:07am PDT