ராயல் என்ஃபீல்டு பைக்கில் 'மாஸ்டர்' நடிகை: வேற லெவலில் வைரல்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது தவிர பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான புகைப்படங்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஸ்டைலாக உட்காந்து இருக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வேற லெவலில் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.