close
Choose your channels

'மாஸ்டர்' நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்: ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு பிளாக் செய்த நடிகை!

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவரை இன்ஸ்டாகிராம் பயனாளி ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் ஏற்கனவே ஒருசில சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து டைட்டில் வின்னர் முகினுடன் ‘சத்தியமா சொல்லுறேண்டி’ என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் பதிவு செய்துள்ளார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் இனிவரும் காலங்களிலும் இதே நபரை ப்ளாக் செய்யும் ஆப்ஷன் இருப்பது மிகவும் பயனுள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.