ஹீரோவாகும் 'மாஸ்டர்' 'துணிவு' நடிகர்.. பிக்பாஸ் பிரபலத்தால் கிடைத்த வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய படங்களில் நடித்த பிக் பாஸ் பிரபலம் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சிபி. இவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ அஜித் நடித்த ’துணிவு’ சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிபி ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் உதவியாளர்களில் ஒருவரான பிரகாஷ் கிருஷ்ணன் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தில் தான் சிபி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ’ஜீவி’ திரைப்படத்தில் கதை எழுதிய பாபு தமிழ் திரைக்கதை எழுத, இந்த படத்திற்கு கபீர் வாசுகி இசையமைக்க உள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை கொண்ட கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More News

உள்ளே இருக்குறவங்கள விட வெளியே இருந்து வர்றவன் டேஞ்சர்.. பக்கா பிளான் போடும் 14 போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

'கேப்டன் மில்லர்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் இயக்குனர்.. 3 பிரபலங்களுடன் வேற லெவல் ஸ்கிரிப்ட்..!

விஜய் சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மீண்டும் விஜய் சேதுபதி படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் 3 பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் வேற லெவல் ஸ்கிரிப்ட் தயாராகி இருப்பதாக

பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆவது இந்த மூன்று போட்டியாளர்களா? நிக்சனுக்கு ஒரு ஆப்பு இருக்குது..!

 பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் ரீஎண்ட்ரியாக போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அவர்கள்

நான் அழுவதற்கான காரணம் என் குழந்தைகளுக்கு புரியவில்லை: செல்வராகவன் உருக்கம்..!

 நான் அழுவதை பார்த்து நான் அழுவதற்கு காரணம் என்ன என்று என் குழந்தைகளுக்கு புரியவில்லை என்றும்  தந்தை அழுது அவர்கள் பார்த்ததில்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில்